குற்றப் புலனாய்வுத் துறையினர் தாக்கல் செய்த முன்னாள் இராஜாங்க அமைச்சர்
டயானா கமகே மீதான வழக்கு விசாரணை இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்
விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடவுச்சீட்டு பெறுவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளரிடம்
தவறான தகவல்களைச் சமர்ப்பித்ததாகவும், செல்லுபடியாகும் விசா இல்லாமல்
இலங்கையில் வசித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விசாரணை ஆரம்பம்
இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன் இன்று
விசாரிக்கப்பட்டது.

அத்துடன் நடைமுறைகளின் போது, முன்னாள் அமைச்சர் கமகேவிடம் குற்றச்சாட்டுகள்
வாசிக்கப்பட்டன.எனினும், அவர் தன்னை குற்றவாளி அல்ல என வாதிட்டார்.
இந்த நிலையில் அரசு சட்டதாரணியான அகிலா தர்மதத்தின் வழிகாட்டுதலின் கீழ்,
குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் முன்னாள் அதிகாரி ஹன்சிகா
குமாரசிறியிடமிருந்து சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.
பின்னர் நீதிமன்றம் சாட்சியங்களை மேலும் விசாரிப்பதை டிசம்பர் 15 ஆம்
திகதிக்கு ஒத்திவைத்தது.


