முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புத்தரைக் கைது செய்த அநுர! பேரணிக்கு கம்மன்பிலவின் ஆட்சேர்ப்பு

இலங்கையின் வரலாற்றில் புத்தர் சிலையைக் கைது செய்த முதல் ஆட்சியாளராக
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சாதனை படைத்துள்ளார் என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

புத்தரைக் கைது
செய்வதற்குச் சமமாக இடம்பெற்ற இந்தச் சம்பவத்தால் ஒட்டுமொத்த பௌத்த சமூகமும்
அதிர்ச்சியடைந்துள்ளது. எமது நுகேகொடைப் பேரணியில் இவ்வாறான சம்பவங்களுக்கு
முற்றுப்புள்ளி வைப்பதற்காக இந்த அரசாங்கத்தின் முடிவை ஆரம்பிக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

பேரணிக்கு வாழ்த்துக்கள் 

இது குறித்து ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில்,  

நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை இந்த அரசாங்கத்தின் முடிவின் ஆரம்பிப்பதைக்
குறிக்கும் நுகேகொடை பேரணியில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக்
கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பிவிதுரு ஹெல உருமய, ஸ்ரீலங்கா மகாஜன
கட்சி, ஜனதா சேவக கட்சி, நவ ஜனதா பெரமுன உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள்
பங்கேற்கவுள்ளன.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசுக்கு எதிராக
நடத்தப்படும் முதல் எதிர்ப்புப் பேரணிக்குத் தமது ஆதரவைத் தெரிவிக்கும்
பொருட்டு, மக்களுடன் இணைந்து பேரணியில் கலந்துகொள்ள இருப்பதாக எங்களுக்கு
அறிவித்துள்ளனர்.

புத்தரைக் கைது செய்த அநுர! பேரணிக்கு கம்மன்பிலவின் ஆட்சேர்ப்பு | Trincomalee Buddha Statue Issue

பங்கேற்காத சில கட்சிகளும் இந்தப் பேரணிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளன.
அவர்கள் அனைவரின் சகோதரத்துவத்துக்கும் நாங்கள் தலைவணங்கி நன்றி
தெரிவிக்கின்றோம்.

எங்களிடம் உள்ள வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு இந்தப் பேரணியை ஏற்பாடு
செய்யும்போது, எங்களுக்கு இருந்த மிகப் பெரிய சவால் என்னவென்றால், இந்தப்
பேரணிக்கு எப்படி விளம்பரம் கொடுப்பது என்பதுதான்.

ஏனெனில், எங்களிடம் உள்ள
வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு இந்தப் பேரணிக்கு விளம்பரம் கொடுப்பது
எப்படி என்ற சவால் எங்களுக்கு இருந்தது.

ஆனால், அரசாங்கத்தால், இலங்கையின் வரலாற்றில் எதிர்க்கட்சியின் பிரசாரப் பேரணி
ஒன்றுக்கு கிடைத்ததிலேயே அதிகபட்ச விளம்பரத்தை, தற்போது 21ஆம் திகதி நுகேகொடை
நகரில் நடைபெறும் பேரணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அநுரவின் சாதனை 

ஜனாதிபதி வரவு – செலவுத் திட்ட உரையின் போதும், கார்த்திகை வீரர்கள் தின
உரையின்போதும், ஏன் நாடாளுமன்றத்துக்கு ஓடிச்சென்று திருகோணமலையில் புத்தர்
சிலை பற்றி பேசியபோதும் நுகேகொடை பேரணியை நினைவுபடுத்துவதற்கு மறக்கவில்லை.

அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தினமும்
நினைவுபடுத்தி இந்தப் பேரணியை வெற்றிபெறச் செய்ய, எதிர்க்கட்சியின் சகோதரக்
கட்சிகளைப் போலவே, அரசாங்கத்தின் பக்கத்திலிருந்தும் எங்களுக்கு வழங்கிய அந்த
ஆதரவை நாங்கள் மிகுந்த நன்றியுடன் நினைவுகூருகின்றோம்.

புத்தரைக் கைது செய்த அநுர! பேரணிக்கு கம்மன்பிலவின் ஆட்சேர்ப்பு | Trincomalee Buddha Statue Issue

பேரணி நடைபெறுவதற்கு முன்பே, அது இலங்கை வரலாற்றின் மிக வெற்றிகரமான பேரணியாக
மாறிவிட்டது. ஏனெனில், இவ்வளவு பெரியதொரு அரசாங்கத்தைப் பயமுறுத்திய வேறு
எந்தவொரு பேரணியும் இலங்கையின் வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை.

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம், நவம்பர் 21ஆம் திகதி பேரணியை வெற்றிபெறச்
செய்வதற்காக நாங்கள் செய்த ஒரு தந்திரம் என்று ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின்
பல முக்கியஸ்தர்கள் கூறுகின்றனர். அவ்வாறெனில் பிக்குகளைத் தாக்கி, புத்தர்
சிலையை அகற்றுவதற்குப் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியது நாங்களா? உண்மையில்,
இலங்கை வரலாற்றில் புத்தர் சிலையை கைது செய்த முதல் ஆட்சியாளராக ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க சாதனை படைத்துள்ளார்.

புத்தரைக் கைது செய்வதற்கு சமமான, ஒட்டுமொத்த பௌத்த சமூகமும் அதிர்ச்சியடைந்த
ஒரு சம்பவமாக இந்தத் திருகோணமலை விவகாரம் பதிவாகியுள்ளது. நாட்டை ஆட்சி செய்த
ஏகாதிபத்தியவாதிகள்கூட பௌத்த மதத்தை இவ்வளவு அவமானப்படுத்தவில்லை  என்பதை
நாங்கள் மிகவும் வேதனையுடன் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

நுகேகொடை பேரணியை எண்ணி அரசாங்கம் அச்சமடைந்துள்ளது. பெரும் மழை பெய்தாலும்,
காற்று வீசினாலும், அரசாங்கம் ஊரடங்குச் சட்டம் விதித்தாலும், அரசாங்கம்
இந்தப் பேரணியைத் தடை செய்தாலும், நவம்பர் 21ஆம் திகதி மாலை நுகேகொடை நகரில்
இந்தப் பேரணி நிச்சயம் நடைபெறும்  என குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.