திருக்கோணேஸ்வரம் ஒரு பௌத்த விகாரை, அது முன்னர் கோகண்ண திஸ்ஸ விகாரையாக இருந்தது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில், இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பின் போது, ஐபிசி தமிழின் சிரேஸ்ட ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த தேரர், “இந்த நாட்டில் முழு நிலமும் புத்த பூமி.
காணிகள் அதிகம் இருப்பது விகாரைகளுக்காக தான், கோணேஸ்வரம் தொடர்பில் யாரும் கதைப்பதில்லை. அது முன்னர் கோகண்ண திஸ்ஸ விகாரையாகும்” என கூறியுள்ளார்.
எமது ஊடகவியலாளர் மேலும் சரமாரியாக எழுப்பிய பல கேள்விகளுக்கு தேரர் கோபமடைந்த நிலையில் அளித்த பதில்களுடன் வருகின்றது பின்வரும் காணொளி,

