திருகோணமலையில் 90 சதவீதமான வாக்களிப்பு இடம்பெறும் என்பதுடன் தமிழரசு
கட்சிக்கே அதிக ஆதரவு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை தமிழ்
மகாவித்தியாலயத்தில் தனது வாக்கினை பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது உள்ளூராட்சி மன்ற
தமிழரசுக் கட்சி வேட்பாளர்களும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் திருகோணமலை மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(6) காலை முதல் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது.
கந்தளாயில் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தந்து, தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
திருகோணமலையில், 13 பிரிவுகளுக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

இந்நிலையில், வாக்குச்சாவடிகளைச் சுற்றி பாதுகாப்புப் படையினர் பலத்த பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளனர்.




