முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருகோணமலை மக்களின் காணி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு..!

திருகோணமலை மாவட்டத்தில், மக்களின் குடியிருப்பு காணிகளை உரியவாறு அடையாளம்
கண்டு, அவைகளை விடுவிப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில், புதிய
அரசாங்கம் அக்கறையுடன் செயல்படும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர உறுதியளித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த,
கிழக்கு மாகாண துறைமுக ஊழியர்களின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில் மானியம்
மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (19) சீனக்குடா துறைமுக
அதிகார சபை மண்டபத்தில் நடைபெற்றது.

அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின், ஊழியர் கூட்டுறவு வங்கியினால்
இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்து கொண்டு, உரையாற்றுகையிலே அவர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அபிவிருத்தி திட்டங்கள் 

மேலும், அபிவிருத்தி திட்டங்கள் என்பது, மக்களோடு பின்னிப் பிணைந்த, ஒரு செயற்பாடாகும்.
மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்ற அபிவிருத்தி திட்டங்களால் எதனையும் சாதித்து
விட முடியாது.

திருகோணமலை மக்களின் காணி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு..! | Trincomalee People Land Issue Arun Hemachandra

இலங்கை துறைமுக அதிகார சபை என பேசும் போதெல்லாம், அங்கு மக்கள் மத்தியில்,
இயல்பாக எழுந்து வருகின்ற ஒரு விடயம் தான் காணிப்பிரச்சினை பற்றியதாகும்.

திருகோணமலை மாவட்டத்தில், துறைமுக அதிகார சபை தொடர்பான காணிகள், மக்கள்
குடியிருப்பு
காணிகள் தொடர்பாகவும், பல்வேறுபட்ட முரண்பாடுகள், தெளிவின்மை, விரிசல்கள்
என்பன சமூகத்தில் நிலவுகின்றன.

எனவே, ஒரு குறுகிய காலத்துக்குள் இந்த மக்கள்
எதிர்நோக்குகின்ற காணிப்பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு காண முடியும் என
நம்புகிறேன்“ என குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.