முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் (kamala haris)பேட்டியை திரித்து வெளியிட்டதாக தெரிவித்து பிரபல செய்தி நிறுவனத்திற்கு எதிராக ட்ரம்ப்(trump) வழக்கு தொடர்ந்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சிசார்பில் கமலா ஹாரிசும், குடியரசு கட்சியின் சார்பில் ட்ரம்ப்பும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஜனாதிபதி ட்ரம்ப் கடும் எதிர்ப்பு
இதனிடையே, தேர்தலுக்கு முன்பு கமலா ஹாரிஸ் கொடுத்த பேட்டியை மட்டுமே சி.பி.எஸ்., எனும் செய்தி நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. இதற்கு, ஜனாதிபதி ட்ரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதாவது, ஒரு மணிநேரம் எடுக்கப்பட்ட நேர்காணலில் வெறும் 20 நிமிடங்களை மட்டும் கமலா ஹாரிஸூக்கு ஆதரவாக வெளியிட்டு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
10 பில்லியன் டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு
எனவே, உண்மையை திரித்து கூறும் வகையில் காணொளியை எடிட் செய்து வெளியிட்டுள்ளதால், சி.பி.எஸ்.,ன் தாய் நிறுவனமான பாராமவுன்ட் குளோபலுக்கு எதிராக 10 பில்லியன் டொலர் இழப்பீடு கேட்டு ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனிடம் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த செயலில் ஈடுபட்ட சி.பி.எஸ்., செய்தி நிறுவனத்தை முடக்க வேண்டும் அல்லது சுமார் 60 நிமிடங்கள் ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.