சிரியாவுடன் மோதல்களை உருவாக்க வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே கலந்துரையாடல் ஒன்று நேற்று(15) இடம்பெற்றுள்ளது.
இந்த உரையாடலின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
ஹமாஸ் கைதிகளின் விடுவிப்பு
அத்துடன், இந்த கலந்துரையாடலில் காஸாவில் ஹமாஸ் கைதிகளை விடுவிப்பது மற்றும் சிரியாவின் சமீபத்திய நிலைமை குறித்து ஆராயப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்னதாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேவேளை, தனது எல்லைப் பகுதிகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர மட்டுமே எதிர்பார்ப்பதாக இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
மேலும், காஸா பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் சுமார் 45,000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.