முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காசா அழிவின் தலம் – அமெரிக்கா கைப்பற்றியே தீரும்: டிரம்ப் அதிரடி அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசா முனையை அமெரிக்கா கைப்பற்றும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்  (Donald Trump) அறிவித்துள்ளார்.

அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என கூறி விடயம் சர்வதேச அளவில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) இடையே வெள்ளை மாளிகையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

அரபு நாடுகளுக்கு இடம்பெயர வேண்டும்

பலஸ்தீன காசா (Gaza) பகுதியில் இஸ்ரேல் – ஹமாஸ் நெருக்கடி மற்றும் மேற்குக் கரையில் பலஸ்தீனியர்கள் தொடர்பான நெருக்கடி ஆகியவை இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே விவாதப் பொருளாக இருந்தன.

காசா அழிவின் தலம் - அமெரிக்கா கைப்பற்றியே தீரும்: டிரம்ப் அதிரடி அறிவிப்பு | Trump And Netanyahu To Meet At White House Today

அங்கு கருத்துத் தெரிவித்த டொனால்ட் டிரம்ப், எவ்வித மாற்று வழிகளும் இல்லை என்பதால் தான் பாலத்தீனர்கள் மீண்டும் காசாவுக்கு செல்வதாகவும் காசா ‘அழிவின் தலமாக’ இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, காசாவில் வாழும் சுமார் 18 லட்சம் மக்கள் எகிப்து மற்றும் ஜோர்டான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

மேலும், காசா முனையை அமெரிக்கா கையிலெடுத்து அங்கு தேவையான பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமைதிக்கான நோபல் பரிசு

இஸ்ரேலிய அரசாங்கத்திற்கும் ஹமாஸுக்கும் இடையே தற்போது போர் நிறுத்தம் உள்ளது. தனது தலையீட்டால் தான் போர் நிறுத்தம் வெற்றி பெற்றதாக டிரம்ப் கூறியுள்ளார்.

காசா அழிவின் தலம் - அமெரிக்கா கைப்பற்றியே தீரும்: டிரம்ப் அதிரடி அறிவிப்பு | Trump And Netanyahu To Meet At White House Today

வெள்ளை மாளிகையில் ஒரு பத்திரிகையாளர் டிரம்பிடம் அதற்காக நோபல் பரிசு பெற வேண்டுமா என்று கேட்டபோது, ​​டிரம்ப், “ஆம், நான் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற வேண்டும்” என்று பதிலளித்தார்.

“ஆனால் அவர்கள் அதை எனக்குக் கொடுக்க மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காசா முனையை கைப்பற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் திட்டம் வரலாற்றை மாற்றக்கூடியது என்று இஸ்ரெல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். 

மேலும் டிரம்ப் ஜனாதிபதியான பிறகு அவரைச் சந்தித்த முதல் நாட்டுத் தலைவர் நெதன்யாகு என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.