தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளமை சர்வதேச மட்டத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தென்னாபிரிக்கா இந்த ஜி20 கூட்டமைப்பில் இருக்கக் கூடாது என்றும், ஏனெனில் “அந்நாட்டில் நடக்கும் விஷயங்கள் மோசமாக உள்ளது” என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். “அந்த நாட்டில் உச்சி மாநாடு நடைபெற்றால் நான் செல்ல மாட்டேன் என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் மோடியின் பங்கேற்பு
இதேவேளை ட்ரம்ப் கலந்துகொள்ளும் மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்ளாமல் இருந்த நிலையில் ட்ரம்ப் கலந்து கொள்ளாத மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பர் 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்கள் தென்னாபிரிக்காவின் தலைநகர் ஜோகன்ஸ்பேர்க் நகரில் இந்த மாநாடு நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

