சீனாவில்(china) தயாரிக்கப்படும் ஸ்மாட்தொலைபேசிகள்,கணனிகள், உட்பட பல மின்னணு சாதனங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(donald trump), விதிக்கப்பட்ட புதிய வரிகளை நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களில் ஸ்மாட் தொலைபேசிகள், கணினிகள், மொனிட்டர்கள், மெமரி கார்டுகள் மற்றும் பல்வேறு மின்னணு கூறுகள் மற்றும் உதிரிப்பாகங்கள் ஆகியவை அடங்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு வரி விலக்கு
இந்த சாதனங்களில் பெரும்பாலானவை சீனாவில் தயாரிக்கப்படுவதால், அவற்றின் விலைகள் காலவரையின்றி உயரக்கூடும் என்ற பிரச்சினையை அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்க ஜனாதிபதியிடம் எழுப்பியதே இதற்குக் காரணம் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதிய வரிகள் அமெரிக்காவில் ஐபோன்கள் மற்றும் பிற மின்னணு பொருட்களின் விலையை மூன்று மடங்காக உயர்த்தியிருக்கலாம் என்று வெளிநாட்டு ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டிருந்தன.
இதற்குக் காரணம், அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்களில் சுமார் 80% சீனாவிலும், மீதமுள்ள 20% இந்தியாவிலும் தயாரிக்கப்படுகின்றன.