வரலாற்றிலேயே மிகச் சிறந்த இராணுவ தாக்குதல்களில் ஒன்றை அவமதிக்க ஊடகங்கள் முயல்வதாகக் அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரானின் (Iran) அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா சனிக்கிழமை தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலை அற்புதமான இராணுவ வெற்றி என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இராணுவ தாக்குதல்
இந்தநிலையில், அமெரிக்காவின் தாக்குதல் குறித்த பென்டகன் உளவுத்துறையின் ஆரம்பகால மதிப்பீடுகள் கசிந்துள்ளன.
தாக்குதலுக்குப் பின்னரும் ஈரானின் சென்ட்ரிஃபியூஜ் கட்டமைப்புகள் பெரும்பாலும் அப்படியே இருப்பதாகவும், நிலத்தடிக்கு மேலே உள்ள கட்டமைப்புகள் மட்டுமே சேதமடைந்ததாகவும் பென்டகன் மதிப்பீடு பற்றி நன்கு அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில், ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்களானது முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன என தெரிவித்த ட்ரம்ப், வரலாற்றிலேயே மிகச் சிறந்த இராணுவ தாக்குதல்களில் ஒன்றை அவமதிக்க ஊடகங்கள் முயல்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
கடுமையான ஆபத்து
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நமது பி-2 விமானிகள் இதைச் சாத்தியமாக்கினார்கள்.
நிலவோ வெளிச்சமோ இல்லாத இரவில், மிகவும் துல்லியமான தாக்குதலை நடத்தினார்கள்.

இலக்கை சரியாகத் தாக்கி, முற்றிலுமாக அழித்துவிட்டார்கள் ஆனால் ஊடகங்கள் மிகவும் அவமரியாதையுடன் நடந்துகொள்கின்றன.
விமானம் ஒவ்வொன்றும் இலக்கைத் துல்லியமாகத் தாக்கியது, இது அந்த விமானங்களைக் கடுமையான ஆபத்துகளுக்கு நடுவே வழிநடத்திய தேசபக்தர்களை அவமதிக்கும் செயலாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.

