கனடாவில் (Canada) இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரியை அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஒத்திவைத்துள்ளதாக சர்வதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனடிப்படையில், கனடிய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கும் நடைமுறையை ட்ரம்ப் ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.
வர்த்தக போர் ஏற்படும் அபாயம் இருப்பதை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதிக வரி
அமெரிக்காவை தொடர்ந்து கனடாவும் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நடைமுறையை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
இதன்படி, ஏப்ரல் இரண்டாம் திகதி வரை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படாது என கனடா நாட்டின் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு இறக்குமதி
2020 அமெரிக்கா – மெக்சிக்கோ (Mexico) – கனடா ஒப்பந்தத்தை ஏற்று கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படாது.
இருப்பினும், இது ஒருமாத காலத்திற்கு மட்டும் தான் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.