கனடா (Canada) அமெரிக்காவுடன் இணைந்தால் மட்டுமே கோல்டன் டோம் (Golden Dome) பாதுகாப்பு இலவசம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அறிவித்துள்ளார்.
கனடா இதற்கு இணங்காவிட்டால் குறித்த கட்டமைப்பில் இணைவதற்கு 61 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட வேண்டுமெனவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
குறித்த விடயத்தை அமெரிக்க ஜனாதிபதி தனது Truth சமூக ஊடக தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.
உறவு மிகவும் மோசமான நிலை
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றதிலிருந்து அமெரிக்கா – கனடா இடையேயான உறவு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
BREAKING: President Trump has informed Canada that it will cost $61B if they want to be a part of the Golden Dome System, but if they become the 51st state, it will cost nothing.
Trump wrote on Truth Social: “I told Canada, which very much wants to be part of our fabulous… pic.twitter.com/vboXzr2I39
— RedWave Press (@RedWave_Press) May 27, 2025
அவரின் கூடுதல் வரி – கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்த அழுத்தம் போன்றவை இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவை மோசமடையச் செய்து வருகிறது.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில், அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக கனடா இணைந்தால் தமது Golden Dome ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பில் இலவசமாக இணைய முடியுமென அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஏவுகணை பாதுகாப்பு
எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நோக்கில் அமெரிக்காவினால் கடந்த வாரம் Golden Dome ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பு தொடர்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

குறித்த பாதுகாப்பு கட்டமைப்பில் இணைவதற்கு கனடா விருப்பம் தெரிவித்திருந்த நிலையிலேயே அமெரிக்க ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

