இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரனுக்கு (M. A. Sumanthiran) இரண்டு மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையானது தற்போது பெரும் சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.
அநுர (Anura Kumara Dissanayake) அரசு ஆட்சியமைத்த பின்னர் செலவினங்களை குறைக்க வேண்டும் என்ற
அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்
அந்தவகையில், கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் உட்பட பல நாடாளுமன்ற
உறுப்பினர்கள் மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பினை பெற்றுக் கொள்ளவில்லை.
இருப்பினும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக காணப்படுகின்ற
எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பு
வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடானது அநுர அரசு ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு முகத்தை காட்டி சலுகைகளை
வழங்குகின்றதா அல்லது சுமந்திரனுடன் ஏதாவது ஒப்பந்தம் செய்துகொண்டதா என்ற
கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலதிக செய்திகள் : பு. கஜிந்தன்
https://www.youtube.com/embed/6GHXTe9vSBY