முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் தாமதமாகும் இரண்டு முக்கிய முதலீட்டுத் திட்டங்கள்

ஹம்பாந்தோட்டையில் முன்மொழியப்பட்ட சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
மற்றும் கொழும்பு துறைமுகத்தில் ஒரு மூலோபாய மையம் ஆகிய இரண்டு சீனத்
திட்டங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

பெரும்பாலும் முதலீட்டாளர்கள், எதிர்பார்க்கும் வரிச் சலுகைகள் போன்ற நன்மைகள்
காரணமாக, இந்த திட்டங்கள் தாமதமாகின்றன.

ஹம்பாந்தோட்டையில் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள சுத்திகரிப்பு
நிலையத்தை அமைப்பதற்கு சீன அரசு எரிசக்தி நிறுவனமான சினோபெக்குடன் இலங்கை
ஆரம்ப ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

சினோபெக்

இந்த நிலையில், இலங்கையின் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தால்
வெளியிடப்பட்ட திட்டங்களுக்கான கோரிக்கையின்படி, சுத்திகரிப்பு
நிலையத்திலிருந்து மேற்கொள்ளப்படும் உற்பத்தியில் 20 சதவீதம் மட்டுமே உள்ளூர்
சந்தைக்கும் மீதமுள்ளவை ஏற்றுமதிக்கும் இருக்க வேண்டும் என்று
குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் தாமதமாகும் இரண்டு முக்கிய முதலீட்டுத் திட்டங்கள் | Two Major Investment Projects In Sri Lanka Delayed

எனினும், சினோபெக் அந்த நிபந்தனையை கைவிடக் கோருகிறது என்று இலங்கையின்
அதிகாரப்பூர்வ தரப்புகள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, சினோபெக், ஹம்பாந்தோட்டையில், நிபந்தனை ஒன்றின் அடிப்படையில்
பெரும் நிலத்தையும் கோரியிருந்தது.

இலங்கை அரசாங்கம்

எனினும் இப்போது, அந்த விடயத்திலும் இலங்கை அரசாங்கம், எந்த
கட்டுப்பாடுகளையும் விதிக்கக்கூடாது என்று, சினோபெக் கூறுவதாக இலங்கை அதிகாரி
ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தாமதமாகும் இரண்டு முக்கிய முதலீட்டுத் திட்டங்கள் | Two Major Investment Projects In Sri Lanka Delayed

இதற்கிடையில், கொழும்பு துறைமுகத்திற்கான முன்மொழியப்பட்ட சீனா தலைமையிலான
மூலோபாய மையம் திட்டத்தையும் இலங்கை அரசாங்கம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்