மறைந்த இரா.சம்பந்தனின் (R. Sampanthan) மகளுக்கும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கும் (Douglas Devananda) உடனடியாக அரசாங்க பங்களாக்களை ஒப்படைக்குமாறு நீதித்துறை அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபை உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சு அறிவித்துள்ளது
குறித்த அறிவிப்பானது, எழுத்து மூலம் இன்று (20) விடுக்கப்பட்டுள்ளது.
சம்பந்தனின் பங்களா கடந்த 12ஆம் திகதி கையளிக்கப்படும் என அவரின் மகள் அமைச்சுக்கு கடிதம் மூலம் அறிவித்த போதும் இன்று (20) வரை அது கையளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சம்பந்தனின் குடும்ப உறுப்பினர்கள்
அவர் இறந்த பிறகு, சம்பந்தனின் குடும்ப உறுப்பினர்கள் அந்த பங்களாவில் தொடர்ந்து தங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர், அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் வரையில் அவருக்கு அந்த பங்களாவை வழங்க அப்போதைய அரசாங்க அமைச்சரவை தீர்மானித்திருந்தது.
இதேவேளை, முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இன்னும் அரசாங்க பங்காளவொன்றில் தங்கி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.