யாழ்ப்பாணம் (Jaffna)- சாவகச்சேரி பகுதியில் போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (12) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இயங்கும் மாவட்ட பொலிஸ்
புலனாய்வு பிரிவின் தகவலில் சாவகச்சேரி பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்றையதினம் சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
மேலதிக விசாரணை
இதன்போது, இரு இளைஞர்கள்
200 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர்கள் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையின் பின்னர் இன்று (13) நீதிமன்றில்
முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.