ஹொங்கொங்கை(hong hong) தாக்கிய கடும் புயல் (cyclone)காரணமாக 400 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதால் 80 ஆயிரம் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமான ஹொங்கொங்கில் பாரிய புயல் தாக்கியது.இந்த புயல் காரணமாக மரங்கள் சாய்ந்து விழுந்ததால் பெரும் விமானப் போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டன.
மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்பு
நகரின் பல்வேறு பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. புயல் காற்றுடன் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வீழ்ந்து கிடக்கும் மரங்கள்
ஹொங்கொங்கில், வீதிகளில் விழுந்துகிடக்கும் மரங்களின் கீழ் வாகனங்கள் நின்றன. மரங்கள் விழுந்ததாக 450 க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாகவும், 26 பேர் பொது மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் காரணமாக அதிவேக தொடருந்து சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த புயல் இந்த வார இறுதியில் வியட்நாமை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



