ஐக்கிய அரபு அமீரகத்தில் (United Arab Emirates) உள்ளடக்க படைப்பாளர்களுக்கு (Content Creators) கோல்டன் விசா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் தனது கோல்டன் விசா (Golden Visa) திட்டத்தை இன்னும் சில குழுவினருக்கு விரிவுபடுத்தியுள்ளது.
இதனடிப்படையில், துபாயில் Creators HQ என்ற புதிய முயற்சியின் மூலம் டிஜிட்டல் உள்ளடக்க படைப்பாளர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தேவையான ஆதரவு
இந்த திட்டம் பத்து ஆண்டுகளுக்கு புதுப்பிக்கக்கூடிய குடியிருப்பு அனுமதியுடன் உலகின் பல்வேறு இடங்களிலிருந்து படைப்பாளர்களை அமீரகத்திற்கு வர அனுமதிக்கின்றது.
2025 ஜனவரி 13 அன்று எமிரேட்ஸ் டவர்ஸ் இல் தொடங்கப்பட்ட இத்திட்டம் குறித்த மையம் படைப்பாளர்களுக்கு தேவையான ஆதரவு மற்றும் வளங்களை வழங்குகின்றது.
மெட்டா (Meta), டிக்டாக் (TikTok), எக்ஸ் தளம் (Twitter) உள்ளிட்ட பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இத்திட்டம் இணைந்துள்ளதுடன் 20 நாடுகளிலிருந்து ஏற்கனவே 100 பேர் இதில் உறுப்பினராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் அரசு இந்த திட்டத்திற்காக $40.8 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ள நிலையில் இது கோல்டன் வீசா விண்ணப்பம், தொழில்கள் பதிவு மற்றும் குடியேற்ற சேவைகளுக்கு உதவுகின்றமை குறிப்பிடத்தக்கது.