முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உதய கம்மன்பில நாட்டைவிட்டு தப்பியோடினாரா…!

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில நாட்டைவிட்டு தப்பியோடியுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

அத்துடன், குற்றப்புலனாய்வுத்துறை திணைக்களம் அவரை கைது செய்வதற்கு தேடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல்(ஓய்வு) நிஷாந்த உலுகேதென்ன, பொதுஹெர பகுதியில் நபரொருவரை 2010ஆம் ஆண்டு கடத்தி, கொலை செய்த சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் கடற்படையின் புலனாய்வு பிரிவின் பிரதானியாக செயற்பட்டார்.

ICCPR சட்டம்

கடத்தப்பட்ட நபர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் சட்டவிரோத தடுப்பு முகாம் அவரது கண்காணிப்பில் செயற்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்ததையடுத்து அவர் கடந்த ஜுலை மாதம் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  

உதய கம்மன்பில நாட்டைவிட்டு தப்பியோடினாரா...! | Udaya Gammanpila Nishantha Ulugetenne

அது தொடர்பில், அரசாங்கம் யுத்தத்தை வெற்றிக் கொள்ளப்பாடுபட்ட ஆயுதப் படைகளை இழிவுப்படுத்துவதாக ஊடக சந்திப்பு ஒன்றில் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

இதன் பிறகு குற்றப்புலனாய்வு திணைக்களம் நடத்திய விசாரணையில் கம்மன்பிலவின் கருத்து இரு சமூகங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தக் கூடியது என்பதால் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை ICCPR சட்டத்தின் 3-1 வகுதியில் மற்றும் தண்டனை சட்டகோவையின் 120 வகுதியில் அவரை கைது செய்ய கூடும் என தெரியவருகிறது.

பிணை வழங்க முடியாது

ஆனால், அவரை தேடும் பணி பலனிக்கவில்லையெனவும் கூறப்படுகிறது.
அவுஸ்திரேலிய பிரஜை ஒருவரை மிரட்டிய வழக்கும் நிறைவடைந்த நிலையில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாடு செல்வதற்கான தடையும் நீக்கப்பட்டிருந்தது.

உதய கம்மன்பில நாட்டைவிட்டு தப்பியோடினாரா...! | Udaya Gammanpila Nishantha Ulugetenne

கடவுச்சீட்டும் கையில் இருந்ததால் அவர் வெளிநாடு சென்றிருக்கலாம்.
மேலும் நிஷாந்த உலுகேதென்னவின் வழக்கில் பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணி அச்சலாவும் கம்மன்பிலவுக்கு எதிராக அதுவும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை ICCPR ஒப்பந்தத்தில் முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளார்.

இதன்படி, அவர் கைது செய்யப்பட்டால் நீதிபதிக்கு பிணை வழங்க முடியாது. அவர் இவற்றை அறிந்துள்ளமையால் அவர் தலைமறைவாகியிருக்கலாம்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.