முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதியின் ஜெர்மன் விஜயம்: விடுதலை புலிகளின் தலைவர்களுடனான சந்திப்பே பின்னணியா..!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான நெடியவனை சந்திப்பதற்காக ஜெர்மன் விஜயம் செய்தாரா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி அநுரவின் ஜெர்மன் விஜயம் உள்நோக்கத்தை கொண்டது என சமூக ஊடகங்களில் தகவல்கள் பரிமாறப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஜெர்மன் விஜயம் செய்யும் அதே நேரத்தில் நெடியவன் ஜெர்மனிக்கு செல்வதாகவும் இலங்கையில் சந்திக்க முடியாத காரணத்தினால் அவர்கள் இருவம் ஜெர்மனியில் சந்திக்கின்றார்களா என சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது எனவும் கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் முக்கிய பிரதானி

ஜனாதிபதி அநுர இந்த விஜயத்தின்போது ஜெர்மன் அதிபரையோ வெளிவிவகார அமைச்சரையோ சந்திக்கவில்லை என ஜனாதிபதி செயலகத் தகவல்களின் மூலம் தாம் அறிந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஜெர்மன் விஜயம்: விடுதலை புலிகளின் தலைவர்களுடனான சந்திப்பே பின்னணியா..! | Udaya Questions Anuras Germen Visit

ஜெர்மனியில் பெயரளவு பதவி வகிக்கும் ஜனாதிபதியை மட்டுமே அநுர சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே இந்த விஜயமானது உள்நோக்கத்தை கொண்டது எனவும் இதனால் பொதுமக்கள் பணம் விரயமாகின்றது என்ற கேள்வி எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒர் நாட்டின் தலைவர் பிரிதொரு நாட்டுக்கு விஜயம் செய்யும் போது அரசாங்கத்தின் பிரதானியை சந்திக்க வேண்டுமே தவிர பெயரளவு பதவி வகிப்போரை சந்திப்பதில் பயனில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விஜயத்தில் முக்கியஸ்தர்களை சந்திக்கின்றாரா அல்லது தேசிய மக்கள் சக்தி தலைவர்களை சந்தித்து திரும்புகின்றாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டுமென உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.