பிரித்தானியாவிற்கு செல்லும் இலங்கை அரசியல் தலைவர்கள் மற்றும் இராணுவ தளபதிகள் கைது செய்யப்பட கூடிய சூழ்நிலை உருவாகலாம் என பிரித்தானியாவில் உள்ள மூத்த சட்டத்தரணி அருண் கணநாதன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இலங்கை பொறுப்பு கூறல் விடயத்தில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் சர்வதேசம் தன்னால் செய்யக் கூடிய விடயங்களை அரசியலாக செய்து நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி….

