முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்க வரி விதிப்பு தொடர்பில் பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு

அமெரிக்கா (United States) விதிக்கும் உலோக வரிக்கு எதிராக பிரித்தானியா (United Kingdom) தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவது இல்லை என தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா பிரித்தானியாவின் ஸ்டீல் மற்றும் அலுமினிய இறக்குமதிக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் நிலையில், அதற்கு பதிலாக பிரித்தானிய அரசு எந்தத் தீர்வையும் அறிவிக்காது என அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் (EU) எதிர்வினை நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருந்தாலும், பிரித்தானியா அமெரிக்காவுடன் தொடர்ந்து உரையாடும் என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

நியாயமான உறவு

பிரித்தானியா மற்றும் அமெரிக்கா உறவு நியாயமான, சமமான வர்த்தக அடிப்படையில் உள்ளதாக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வரி விதிப்பு தொடர்பில் பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு | Uk Gov Reacts To Us Metal Tariffs

பிரதமர் ஸ்டார்மர் வெள்ளை மாளிகைக்கு சென்றபோது உலகளாவிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.

வர்த்தகத் துறை 

பிரித்தானிய வர்த்தகத் துறை அமைச்சர் ஜொனாதன் ரெய்னல்ட்ஸ் (Jonathan Reynolds), அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹவார்ட் லுட்னிக் (Howard Lutnick) உடன் தொலைபேசியில் பேசியும் பிரித்தானியாவிற்கு விலக்கு அளிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை விளக்கினார்.

அமெரிக்க வரி விதிப்பு தொடர்பில் பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு | Uk Gov Reacts To Us Metal Tariffs

அமெரிக்காவிற்கு, பிரித்தானியா ஆண்டுக்கு 400 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான எக்கு ஏற்றுமதி செய்கிறது.

UK Steel எனும் தொழில் சங்கம், இந்த அமெரிக்க வரிகள், பிரித்தானிய உலோகத் தொழிலுக்கு பேரழிவாக இருக்கும் என கவலை தெரிவித்துள்ளது.

முடிவாக, பிரித்தானியா அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தையில் இறங்க விரும்புகின்றது ஆனால் எதிர்வினையாக வரிகளை விதிக்க விரும்பவில்லை என்பதில் உறுதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.