முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரித்தானியாவில் வாக்களிக்கும் வயதில் மாற்றம்

பிரித்தானியாவில் வாக்களிக்கும் வயது 16 ஆக குறைக்கப்பட உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவில் 1969 ஆம் ஆண்டு வாக்களிக்கும் வயதை 21 லிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டது.

தற்போது 16 மற்றும் 17 வயதுடையவர்களும் வாக்களிக்கும் திட்டத்தை பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.

தேர்தல் மசோதா

ஜனநாயக ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையில், புதிய தேர்தல் மசோதாவை பிரித்தானிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் வாக்களிக்கும் வயதில் மாற்றம் | Uk Plans To Lower The Voting Age To 16

இதன் ஒரு பகுதியாக 16 மற்றும் 17 வயதுடையவர்களும் அனைத்து தேர்தலிலும் வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் உள்ள உள்ளூர் கவுன்சில் தேர்தல்களுக்கும், செனட் மற்றும் ஸ்காட்டிஷ் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கும் குறைந்தபட்ச வாக்களிக்கும் வயது ஏற்கனவே 16 ஆக உள்ளது.

அடையாள அட்டை

அத்தோடு, வாக்களிக்க ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள அட்டைகளின் பட்டியலில் வாக்காளரின் பெயரைக் காண்பிக்கும் பிரித்தானியா வழங்கிய வங்கி அட்டைகளும் சேர்க்கப்படவுள்ளது.

பிரித்தானியாவில் வாக்களிக்கும் வயதில் மாற்றம் | Uk Plans To Lower The Voting Age To 16

மக்கள் வாக்களிக்கப் பதிவு செய்வதை எளிதாக்கும் வகையில், தானியங்கி வாக்காளர் பதிவு முறை கொண்டு வரப்படவுள்ளது.

இந்த மசோதாவில் பிரித்தானிய தேர்தல் அரசியலில் வெளிநாட்டு தலையீட்டை தடுக்க அரசியல் நன்கொடைகள் குறித்த விதிகளை கடுமையாக்குதல் ஆகியவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்