முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரித்தானியா விதித்துள்ள தடை : இலங்கை அரசை எச்சரிக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை விசாரணை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறும் வரை, நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்கு சர்வதேச நடவடிக்கை அவசியம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) தெரிவித்துள்ளது.

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு பிரதானி உட்பட நான்கு நபர்கள் மீது அண்மையில் பிரித்தானியா (UK) விதித்த தடைகள் குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரித்து பொறுப்புக்கூறலைக் கோருவதற்காக பிரித்தானியா உட்பட பல நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தொடர்ச்சியான திட்டங்களை சமர்ப்பித்துள்ளன.

போர்க்குற்றங்களை விசாரணை செய்தல்

இந்த விடயத்தில் இலங்கை எவ்வித முயற்சியும் எடுக்காத வரை, சர்வதேச நாடுகள் தொடர்ந்து தடைகளை விதிக்க வேண்டிய நிலை உருவாகும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியா விதித்துள்ள தடை : இலங்கை அரசை எச்சரிக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் | Uk Sanctions Former Sl Commanders Hrw Report

இலங்கையில் போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையிடம் ஏற்கனவே உள்ள ஆதாரங்களைப் பயன்படுத்த வேண்டும்“ என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசின் நிலைப்பாடு

நாட்டின் உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புப் படை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூர்ய மற்றும் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் தலைவரான கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் மீது கடந்த திங்கட்கிழமை (24) ஐக்கிய இராச்சியம் தடைகளை விதித்துள்ளது.

பிரித்தானியா விதித்துள்ள தடை : இலங்கை அரசை எச்சரிக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் | Uk Sanctions Former Sl Commanders Hrw Report

இந்த விடயத்தில் தனது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath), பிற நாடுகளால் எடுக்கப்படும் இத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் இலங்கையில் உள்நாட்டு நல்லிணக்க செயல்முறைக்கு எந்த ஆதரவையும் வழங்காது என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.