ஜெனரல் சவேந்திர சில்வா உட்பட 4 இலங்கையர்கள் மீது சமீபத்தில் தடைகளை விதிக்க பிரித்தானியா எடுத்த முடிவுகள் தொடர்பான பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க, ஒரு அமைச்சர் குழுவை நியமிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
பிரித்தானிய அரசாங்கம் எடுத்த முடிவுகள் குறித்து அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா விதித்துள்ள தடைகளின்
தாக்கங்களை மதிப்பிடுவதற்கும், மேலும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதற்கும்
அரசாங்கம், ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.
இதற்காக, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து முழுமையான ஆய்வு நடத்தவும், தொடர்புடைய துறைகளில்
நிபுணர்களை அணுகவும் அமைச்சரவை, இந்த குழுவுக்கு அதிகாரம் அளித்துள்ளது.
மேலதிக தகவல் – இந்திரஜித்