பிரித்தானியாவில்(UK) உள்ள ட்ர்ஹாம்(Durham) பல்கலைக்கழகம் 2025ஆம் ஆண்டிற்கான “Inspiring Excellence 5K” முதுநிலை உதவித்தொகையை அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் மூலம், 200 சர்வதேச மாணவர்கள் தங்களின் முழுநேர (ஒன்றாண்டு) முதுநிலைப் படிப்புகளுக்காக £5,000 கல்விக்கட்டண தள்ளுபடியைப் பெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த உதவி தொகையை பெறுவதற்கான தகுதிகள் மற்றும் விதிமுறைகள் சில குறிப்பிடப்பட்டுள்ளன.
தகுதிகள் மற்றும் விதிமுறைகள்
>இந்த உதவித்தொகையை பெற, விண்ணப்பதாரர்கள் பின்வரும் தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
>2025 செப்டம்பரில் தொடங்கும் MSc, MA, LLM அல்லது MDS போன்ற முழுநேர (ஒன்றாண்டு) முதுநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.
>MBA மற்றும் Business School குறித்த சில படிப்புகள் இந்த உதவித்தொகைக்குத் தகுதியற்றவை.
>2025 மே 4 (முதல் சுற்று) அல்லது ஜூன் 8 ஆம் திகதிக்குள் (இரண்டாம் சுற்று) Durham பல்கலைக்கழகத்திலிருந்து முன்பதிவுச் செய்திருக்க வேண்டும்.
பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தகுதி
>வெளிநாட்டு (overseas) மாணவர் என வகைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
>பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தகுதிகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
>ஏற்கனவே Durham பல்கலைக்கழகம் வழங்கும் எந்தவொரு உதவித்தொகையும் பெறக்கூடாது (சில நாடுகளுக்கான Durham International Scholarship மட்டும் சேர்த்துக்கொள்ளலாம்).
மேலும், அந்த பல்கலைக்கழகம் தொடர்பில் தெரிந்துக் கொள்ள – Durham university