உக்ரைனில்(ukraine) உள்ள அரியவகை கனிமங்களை வெட்டி எடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு(us) அளிக்கும் ஒப்பந்தத்தில், இரு நாடுகளும் நேற்று முன்தினம் (29)கையொப்பமிட்டன.
அரியவகை கனிமங்களை வெட்டி எடுக்க அனுமதி வழங்கியதற்கு பிரதிபலனாக, போரில் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு தர அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.
அமெரிக்கா முட்டாள் அல்ல
இது தொடர்பாக ட்ரம்ப் கூறுகையில், “ஒப்பந்தம் கையெழுத்தானது. உக்ரைனுக்கு அளித்ததை விட அவர்களிடம் இருந்து அதிகம் பெற்றுள்ளோம். செய்த முதலீட்டுக்கான பலன்களை பெறாமல் இருக்க அமெரிக்கா முட்டாள் அல்ல,” என்றார்.

உக்ரைனில் அரியவகை கனிம வளங்கள் ஏராளமாக உள்ளன. உலகின் மொத்த அரியவகை கனிமங்களில், 5 சதவீதம் அந்நாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
கொட்டிக் கிடக்கும் கனிம வளங்கள்
குறிப்பாக, விமான இறக்கை மற்றும் இதர விமான உதிரி பாகங்கள் தயாரிப்புக்கு பயன்படும், ‘டைட்டானியம்’ இங்கு உள்ளது.
அணுசக்தி, மருத்துவ உபகரணங்கள், ஆயுதங்கள் தயாரிப்புக்கு பயன்படும் யுரேனியம், மின்னணு வாகனங்களுக்கான பற்றறி தயாரிப்புக்கு பயன்படும், ‘லித்தியம், கிராபைட், மாங்கனீஸ்’ கனிமங்களும் இங்கு குவிந்து கிடக்கின்றன.

இதுதவிர, எண்ணெய் உள்ளிட்டவற்றையும் எடுக்க அமெரிக்காவுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது

