ரஷ்ய (Russia) தலைநகர் மொஸ்கோ உட்பட 15 பிராந்தியங்களை குறிவைத்து நூற்றுக்கணக்கான ஆளில்லா விமான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
மேலும், இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 158 ஆளில்லா விமானங்களை இடைமறித்து தாக்கி அழித்ததாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்கள் நகரத்திற்கு அருகில் உள்ள நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் மற்றும் நகர எல்லைக்குள் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு மையம் ஆகியவற்றை குறிவைத்து நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆளில்லா விமான தாக்குதல்
உள்ளூர் அதிகாரிகளின் வழங்கிய, 3 ஆளில்லா விமானங்கள் Kashira நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் யாரும் காயமடையவில்லை எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படவில்லை, எனவும் கூறப்பட்டுள்ளது.
122 ஆளில்லா விமானங்கள் உக்ரைனின் எல்லை நகரங்களான Kursk, Bryansk, Voronezh, மற்றும் Belgoro ஆகிய பகுதிகளிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Belgorod பிராந்திய மேயர் Vyacheslav Gladkov, உக்ரைனின் தாக்குதலில் 3 குடியிருப்பு கட்டிடத்தின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளது, தனியார் குடியிருப்பில் பயன்பாட்டு கட்டிடம் ஒன்று முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது.