உக்ரேன் அரசு ரஷ்யாவின் எல்லைப் பகுதியில் மேற்கத்திய நாடுகளால் வழங்கப்பட்ட ஏவுகணைகளைப் பயன்படுத்தி முதல் தாக்குதலை நடத்தி உள்ளது.
ரஷியா- உக்ரைன் இடையில் சண்டை நடைபெற்று ஆயிரம் நாட்களை கடந்து, நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில், ரஸ்யாவிற்கு ஆதரவு வழங்கும் வகையில், ரஸ்யா படையில் வடகொரிய ராணுவ வீரர்கள் இணைந்துள்ள நிலையில், ரஷியாவின் எல்லைக்குள் சென்று தாக்குதல் நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்காவிடம் உக்ரைன் அனுமதி கேட்டது.
இதற்கு தடை விதித்திருந்த அமெரிக்கா உக்ரைனுக்கு உதவும் வகையில் நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்த அனுமதியளித்துள்ளது.
இந்நிலையில் இன்றுடன் உக்ரைன் – ரஷியா போர் ஆரம்பித்து 1000 நாட்கள் நிறைவடைகிறது.
இதனையொட்டி முதல்முறையாக நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷியாவின் ராணுவ கிடங்கை உக்ரைன் தாக்கியுள்ளது.
அமெரிக்காவில் தயாரான நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்தி உக்ரைன் தாக்கியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் அனுப்பிய 6 ஏவுகணைகளில் 5 ஏவுகணைகளை ரஷியா வான் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
ரஷியா சுட்டதில் சேதமடைந்த 6 ஆவது ஏவுகணை இராணுவ கிடங்கில் மேல் விழுந்து அப்பகுதி தீப்பிடித்தது.
இதனால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவிற்கு எதிராக நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியதையடுத்து உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அனுமதி வழங்கியுள்ளார்.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப் உக்ரைன்- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர இருப்பதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.