ரஷ்யாவிற்குள் (Russia) உள்ள இலக்குகளைத் தாக்க உக்ரைன் (Uklraine) நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்துவது போரில் அமெரிக்காவின் (US) நேரடி பங்கேற்பை உருவாக்கும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
குறித்த விடயத்தை ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா ( Maria Zakharova) திங்களன்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தலையீடு
அதன் போது அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “எங்கள் பிரதேசத்தின் மீதான தாக்குதல்களுக்கு Kyiv நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்துவதால், ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் போரில் அமெரிக்காவும் அதன் செயற்கைக்கோள்களும் நேரடியாகப் பங்கேற்பதைக் குறிக்கும்.
அத்துடன், அமெரிக்காவின் தலையீடு மோதலின் தன்மையில் தீவிரமான மாற்றத்தை ஏற்படுத்தும்” என்றார்.
இந்த நிலையில், அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துவதற்கு ஜனாதிபதி ஜோ பைடன்(Joe Biden) அனுமதி வழங்கியிருந்தார்.
நேரடியான ஈடுபாடு
இதன்படி, ரஷ்யாவிற்குள் ஆழமான இலக்குகளைத் தாக்க அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முன்னதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன் போது ஜனாதிபதி புடின், “இந்த முடிவு எடுக்கப்பட்டால், அது நேரடியான ஈடுபாட்டை குறிக்கும், நேட்டோ நாடுகள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனில் போரில் பங்கு வகிக்கின்றன என்று அர்த்தம்.” என குறிப்பிட்டுள்ளாார்.