ரஷ்ய(russia) படைகளின் ஆளில்லா விமான தாக்குதலை உக்ரைன்(ukraine) விமானப் படைமுறியடித்து உள்ளது.
ஷாகித் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட ஆளில்லா விமானங்களை கொண்டு ரஷ்யா வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. இதில், 103 ஆளில்லா விமானங்கள் தாக்குதலை நடத்தியுள்ளன.
அவற்றில், 52 ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தி விட்டோம் என உக்ரைன் தெரிவித்து உள்ளது.
ட்ரோன் குப்பைகள்
தலைநகரான கீவ்வின் புறநகரான ப்ரோவரியில்(Brovary), விழுந்த ட்ரோன் குப்பைகள் ஒரு குடியிருப்பு கட்டிடத்தை தாக்கி, கூரை மற்றும் மின் தூக்கியை(elevator shaft) தீயில் எரித்தது.
Occupiers launch over 100 drones in attack on Ukraine, damaging homes in Kyiv region
Overnight, the Russian army launched 103 drones — air defense systems shot down 52, while another 44 disappeared from radar.
In Brovary, Kyiv region, drone debris struck a residential… pic.twitter.com/OVWbT46ZyB
— NEXTA (@nexta_tv) December 22, 2024
இந்த தாக்குதல் ரஷ்யாவின் தொடர்ச்சியான வான்வழி பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.
எனினும், இந்த தாக்குதலில் உக்ரைனில் உள்ள தனியார் சொத்துகள் மற்றும் பொதுமக்களின் உட்கட்டமைப்புகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.