ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலின் தூதுவர் டேனி டானன், இஸ்ரேல் (Israel) மீதான ஏவுகணைத் தாக்குதல்களை நிறுத்துமாறு யேமனின் ஈரான் ஆதரவு ஹவுதிகளுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தாக்குதல் தொடர்ந்தால் ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் சிரியாவின் அல்-அசாத் ஆகியவர்களுக்கு ஏற்பட்ட அதே பரிதாபகரமான கதி ஹவுதிகளுக்கு நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் உட்பட மத்திய கிழக்கில் உள்ள எந்த இலக்கையும் தாக்கும் திறன் இஸ்ரேலுக்கு உள்ளது என்றும், ஈரானின் பினாமிகளின் தாக்குதல்களை இஸ்ரேல் பொறுத்துக்கொள்ளாது என்றும் தூதுவர் கூறியுள்ளார்.
இறுதி எச்சரிக்கை
தொடர்ந்தும் அவர் ஹவுதிகளுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையில், “கடந்த ஆண்டு மத்திய கிழக்கில் என்ன நடந்தது என்பதை நீங்கள் கவனிக்காமல் இருக்கலாம்.
ஹமாஸுக்கு ஹிஸ்புல்லாவுக்கும், அசாத்துக்கும், எங்களை அழிக்க முயற்சித்த அனைவருக்கும் என்ன நடந்தது என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.
இதுவே உங்கள் இறுதி எச்சரிக்கையாக இருக்கட்டும்.
இது அச்சுறுத்தல் அல்ல. இது ஒரு வாக்குறுதி. அதே பரிதாபகரமான விதியை நீங்கள் பகிர்ந்து கொள்வீர்கள்.” என தெரிவித்துள்ளார்.