தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின்
ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின்
ஒருங்கிணைப்பாளர் கோமகன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (26.06.2025) மேற்கொண்ட ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அரசியல் கைதிகள் விடுதலை குறித்த கோரிக்கை
அவர் மேலும் கூறுகையில், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்த கோரிக்கை அடங்கிய மகஜரை ஐ.நா சபையின்
ஆணையாளருக்கு வழங்கியிருந்தோம். இதேநேரம் குறித்த விடயம் குறித்தும் ஏற்கனவே
இலங்கை அரசுக்கும் வலியுறுத்தியிருந்தோம்.

யாழ்ப்பாணம் வருகை தந்த ஐ.நா ஆணையாளர் யாழ்ப்பாணத்தில் காணப்படும்
பல்வேறு இடங்களுக்கும் சென்று பிரச்சினைகள் மற்றும் சாட்சியங்களை நேரில்
பார்வையிட்டிருந்ததுடன் மக்களின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களையும்
பெற்றிருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் எமது அமைப்பினரால் கைதிகளின் விடுதலைக்கான
வலுயுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

