ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது கூட்டத்தொடர் இன்று (18) ஆரம்பமாகியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) தலைமையில் இந்த கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது.
இந்த கூட்டத்தொடரில் காலநிலை மாற்றம், பலஸ்தீன (Palestine) போர், உக்ரைன் (Ukraine4) விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளன.
சமாதான பிரகடனம்
இன்று ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இந்த கூட்டத்தொடரில் இன்று உரையாற்றிய வோல்கர் டர்க், “போர் நிலை காரணமாக கடந்த ஆண்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 72 வீதத்தால் அதிகரித்துள்ளது.
இதில் அதிகளவான பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளடங்கியுள்ளன. போர் நிலையை மேலும் இழுத்தடிக்க முடியாது. போர் இடம்பெறும் இடங்களில் சமாதான நிலை உருவாக்கப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 57 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Pains me to open #HRC56 w/ the cruelty of war
Data gathered by my Office shows: in 2023 civilian deaths in conflict soared by 72%; the proportion of women killed doubled, children tripled
Leaders can’t keep pushing the limits of war & trampling rights
We must restore peace now
— Volker Türk (@volker_turk) June 18, 2024