ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளராக முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் அரசியல் இயக்கப் பிரிவின் பிரதிப் பொதுச் செயலாளராக ஹரீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த சிரேஸ்ட பதவி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நியமனம் உடனடியாக அமுலுக்கு வருவுதாக கட்சி அறிவித்துள்ளது.
பொதுக்கூட்டங்களின் ஏற்பாடுகள்
இந்தப் பதவியில் ஹரின் பெர்னாண்டோவின் முதன்மை பொறுப்பு, நாட்டின் முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து, பொதுவான செயல் திட்டம் ஒன்றை ஒருங்கிணைப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அரசியல் இயக்க முயற்சியின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டுள்ள 1,000க்கும் மேற்பட்ட கூட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களின் ஏற்பாடுகளை மேற்பார்வையிடும் பொறுப்பும் ஹரீன் பெர்னாண்டோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நியமனம் மூலம் கட்சியை வலுப்படுத்தி நாடளாவிய ரீதியில் கட்சியின் செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட உள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.