அமெரிக்க பரஸ்பர வரி நெருக்கடியை தீர்க்க இலங்கை அதிகாரிகள் எடுக்கும் எந்தவொரு நேர்மறையான நடவடிக்கைகளையும் ஆதரிக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன (Ruwan Wijewardene) இன்று (01) தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பின் போது இந்தக் கருத்தை முன்வைத்தவிஜேவர்தன, பரஸ்பர வரி பிரச்சினையை தீர்ப்பதற்கான எந்த நேர்மறையான நடவடிக்கையும் இதுவரை கொண்டுவரப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் நடவடிக்கை
அதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பரஸ்பர வரி நெருக்கடியை தீர்க்க அரசாங்கம் எந்த நேர்மறையான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
இலங்கை ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா விதித்த 45 வீத பரஸ்பர வரியினால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வேலைகள் ஆபத்தில் உள்ளன.” என்று சுட்டிக்காட்டினார்.
You may like This