முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிழக்கில் ஒருவருக்கு அமைச்சரவை வாய்ப்பு: கசிந்தது தகவல்!

அடுத்த பதினைந்து வாரங்களுக்குள் அமைச்சரவை மறுசீரமைப்பு தயாராகி வருவதாகவும், அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 23 லிருந்து 25 ஆக உயர்த்தப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்போது, கிழக்கு மாகாணத்திலிருந்து ஒரு அமைச்சர் அல்லது துணை அமைச்சர் நியமிக்கப்படலாம் என்றும் தென்னிலங்கை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு, கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் துணை சபாநாயகர் ரிஸ்வி சாலி அல்லது இராஜாங்க அமைச்சர் முனீர் முலாஃபர் ஆகியோருக்கு அமைச்சரவை அமைச்சர் பதவி வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இறுதி முடிவு

அமைச்சரவையில் இதுவரை முஸ்லிம் அமைச்சர்கள் யாரும் இல்லாததால் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

கிழக்கில் ஒருவருக்கு அமைச்சரவை வாய்ப்பு: கசிந்தது தகவல்! | Upcoming Changes In The Sri Lankan Cabinet

பாதுகாப்பு துறை தொடர்பான அமைச்சர் ஒருவருக்கு மற்றொரு பொறுப்பு ஒதுக்கப்படலாம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

அத்துடன், புதிய அமைச்சர் ஒருவர் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது, ஆனால் அது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரியவருகிறது.

இதேவேளை, மற்றொரு துணை அமைச்சரின் பொறுப்பை மாற்றுவது குறித்தும் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரவை மறுசீரமைப்பு

பொதுத் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தி கட்சி அறிவித்தபடி, அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை 25 என்ற வரம்பில் வைத்திருக்கும் அதே வேளையில் அமைச்சரவை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

கிழக்கில் ஒருவருக்கு அமைச்சரவை வாய்ப்பு: கசிந்தது தகவல்! | Upcoming Changes In The Sri Lankan Cabinet   

அமைச்சரவை மறுசீரமைப்புக்கான சரியான திகதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றாலும், அது நடைபெறும் என்று சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் கூறியுள்ளார்.

எனினும், அவ்வாறானதொரு மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் தற்போதைக்கு தீர்மானிக்க வில்லை என்று அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.