உபேந்திரா
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், பின்னணி பாடகர் என பன்முக திறமை கொண்டவர் உபேந்திரா. இவர் கன்னடத்தில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார்.
இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள கூலி திரைப்படம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ட்ரைலரில் கூட இவருடைய கண்களுக்கு வைத்திருந்த கிளோஸ் அப் காட்சி செம மாஸாக இருந்தது.

கண்டிப்பாக கூலி திரைப்படம் உபேந்திரா மாஸ் காட்டப்போகிறார் என படத்தை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

கபாலி சாதனையை முறியடித்த கூலி.. வெளிநாட்டில் புதிய மார்க்கெட்டை ஓபன் செய்த ரஜினிகாந்த்
உபேந்திரா வாங்கிய சம்பளம்
இந்நிலையில், கூலி திரைப்படத்தில் ரஜினியுடன் நடிப்பதற்காக நடிகர் உபேந்திரா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 4 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.


