யேமனில் ஹவுதி போராளிகளின் நிலத்தடி ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து துல்லியமான தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை அறிவித்துள்ளது.
ஹவுதிகள் தெற்கு செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் அமெரிக்க கடற்படை போர்க்கப்பல்கள் மற்றும் வணிகக் கப்பல்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த இந்த ஆயுதக் கிடங்குகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல்கள், பிராந்திய பங்காளிகள் மற்றும் பிராந்தியத்தில் இராணுவ மற்றும் வணிக கப்பல்களை அச்சுறுத்தும் ஈரானிய ஆதரவு ஹவுதி முயற்சிகளை சீரழிக்கும் அமெரிக்க பாதுகாப்பு படையின் முயற்சியாகும்.
தாக்குதல்களுக்கு பதிலடி
செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட கப்பல் மீது ஹவுதி தாக்குதல்களுக்கு பதிலடியாக அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படைகள் யேமனில் உள்ள இலக்குகளை பலமுறை தாக்கியுள்ளன.
CENTCOM Forces Strike Houthi Advanced Conventional Weapon Storage Facilities in Yemen
U.S. Central Command (CENTCOM) forces conducted multiple precision strikes against two Iranian-backed Houthi underground Advanced Conventional Weapon (ACW) storage facilities within… pic.twitter.com/mDr9ceHjBs
— U.S. Central Command (@CENTCOM) January 8, 2025
இந்த நிலையில், காசாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கு எதிராக செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளின் கப்பல்களுக்கு தாக்குதல் நடத்துவதாக ஹவுதி அமைப்பு சபதம் எடுத்துள்ளது.
பரிதாபகரமான கதி
இவ்வாறனதொரு பின்னணியில், இஸ்ரேல் (Israel) மீதான ஏவுகணைத் தாக்குதல்களை நிறுத்துமாறு யேமனின் ஈரான் ஆதரவு ஹவுதிகளுக்கு தொடர் எச்சரிக்கைகளை இஸ்ரேல் ஆதரவு தரப்புகள் விடுத்து வருகின்றன.
அத்தோடு, தாக்குதல் தொடர்ந்தால் ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் சிரியாவின் அல்-அசாத் ஆகியவர்களுக்கு ஏற்பட்ட அதே பரிதாபகரமான கதி ஹவுதிகளுக்கு நேரிடும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.