அமெரிக்கா தயாரித்த 20 அம்ச திட்டம் கொண்ட அமைதி ஒப்பந்தத்தில் பெரும்பாலானவற்றை உக்ரைன் ஏற்றுக் கொண்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது.
இதனை நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
அமைதி ஒப்பந்தம்
இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தினார்.
இதற்காக தயாரிக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை ஏற்பதில் உக்ரைன் தயக்கம் காட்டிய நிலையில் இதனால் அமைதி ஏற்படவில்லை.

இந்தநிலையில், இந்த தாக்குதலை நிறுத்துவதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயற்சி செய்து வந்தது.
இதனடிப்படையில் போர் நிறுத்தம் தொடர்பான 20 அம்சத்திட்டம் தயாரிக்கப்பட்டது.
பிராந்திய பிரச்சினைகள்
இதில் பெரும்பாலான திட்டங்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்தநிலையில், சில பிராந்திய பிரச்சினைகள் மட்டுமே நிலுவையில் உள்ளன.

அமெரிக்கா மற்றும் உக்ரைன் குறித்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட நிலையில் அந்த ஒப்பந்தம் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அந்த ஒப்பந்தத்தில் என்ன உள்ளது என்பது குறித்த தகவலை ஜெலன்ஸ்கி வெளியிடவில்லை.
அதேநேரத்தில், போருக்கு பிந்தைய கட்டுமானப்பணிகள் மற்றும் பாதுகாப்பு உறுதிமொழிகள் குறித்து உக்ரைன் மற்றும் அமெரிக்கா இடையே தனியாக இருதரப்பு ஒப்பந்தம் போடவும் முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

