முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெடித்தது வர்த்தகப் போர்: ட்ரம்பின் அறிவிப்பால் சீனாவுக்கு பேரிடி!!

சீன இறக்குமதிகளுக்கு 104% வரி விதிக்க அமெரிக்கா (US) முடிவு செய்துள்ளது.

வெளிநாட்டு ஊடகங்களின் அறிக்கையின்படி, இந்த வரி திருத்தம் இன்று (09) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) சீனா உட்பட பல நாடுகள் மீது விதித்த புதிய வரிகள், தற்போது உலகம் முழுவதும் தீவிர கவனத்தை ஈர்க்கும் விடயமாக மாறியுள்ளன.

வர்த்தக போர் 

அதனை தொடர்ந்து, ட்ரம்ப் சீனா (China) மீது விதித்த புதிய வரிகளுக்குப் பதிலடியாக, அமெரிக்கா மீது சீனா விதித்த வரிகள் பாரிய வர்த்தக போர் ஒன்றின் முதல் படியாக கருதப்பட்டது.

வெடித்தது வர்த்தகப் போர்: ட்ரம்பின் அறிவிப்பால் சீனாவுக்கு பேரிடி!! | Us Decides To Increase Tariffs On Chinese Imports

அதன்போது, சீனப் பொருட்கள் மீது அமெரிக்கா 34% புதிய வரிகளை விதித்ததற்குப் பதிலளிக்கும் விதமாக, சீனாவும் அமெரிக்கப் பொருட்கள் மீது 34% வரியை விதித்திருந்தது.

மேலதிகமாக 84% வரி

இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த 7 ஆம் திகதி, சீனா அமெரிக்கப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகளை நீக்காவிட்டால், அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் சீனப் பொருட்களுக்கு மேலும் 50% வரி விதிக்க நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்திருந்தார்.

வெடித்தது வர்த்தகப் போர்: ட்ரம்பின் அறிவிப்பால் சீனாவுக்கு பேரிடி!! | Us Decides To Increase Tariffs On Chinese Imports

எனினும், அதற்கு பதிலளித்த சீன வர்த்தக அமைச்சு, ட்ரம்பின் தன்னிச்சையான வரி விதிப்புக்கு எதிராக சீனா இறுதிவரை போராடத் தயாராக இருப்பதாக அறிவித்தது.

இவ்வாறானதொரு பின்னணியில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று முதல் அனைத்து சீன இறக்குமதிகளிலும் 34% வரிக்கு மேலதிகமாக 84% வரியை விதிக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

https://www.youtube.com/embed/f3rceQ3vCx4

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்