உக்ரைன்(ukraine) ரஷ்ய(russia) போர் ஆயிரம் நாள் கடந்தபோதிலும் எவ்வித மாற்றத்தையும் காணவில்லை.மாறாக போரும் அழிவுகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
வடகொரிய(north korea) படையினர் சுமார் 10 ஆயிரம் பேர் உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷ்யாவிற்கு சென்றது அமெரிக்காவை சினம் கொள்ள வைத்துள்ளது.
இதனையடுத்து அமெரிக்க(us) ஜனாதிபதி பைடன்(joe biden) ரஷ்யாவிற்குள் நீண்டதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதியளித்துள்ளார்.
உக்ரைன் ஏவுகணை தாக்குதல்
அமெரிக்க ஜனாதிபதியின் அனுமதியை அடுத்து உக்ரைன் எட்டு ஏவுகணைகளை வீசி ரஷ்ய படைநிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனால் கடுப்பான ரஷ்யா, உக்ரைன் தலைநகர் கீவ் நகரிலுள்ள அமெரிக்க தூதரக தலைமையகம் மீது எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
மூடப்பட்டது அமெரிக்க தூதரகம்
இதனையடுத்து தூதரகம் இன்று(நவ. 20) மூடப்பட்டுள்ளது. ரஷ்ய படைகள் அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தப்போவதாக தகவல் வெளியானதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தூதரகம் மூடப்பட்டுள்ளது.
மேலும், அவ்வாறு தாக்குதல்கள் நிகழ்த்தப்படும்போது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தற்காத்துக்கொள்ள ஏதுவாக, அபாய ஒலி எழுப்பப்படும், அவ்வாறு சைரன் சத்தம் கேட்டால் கீவ் நகரிலுள்ள அமெரிக்கர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தங்களை தற்காத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.