முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஸ்தம்பிதம் அடையப்போகும் உலக நாடுகள்: ட்ரம்ப் பிறப்பித்த அதிரடி உத்தரவு

உலக நாடுகளில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு பயிற்சி உள்ளிட்ட திட்டங்களுக்காக அமெரிக்கா அளித்து வந்த நிதி உதவியை நிறுத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கான உத்தரவை கடந்த திங்கட்கிழமை ட்ரம்ப் பிறப்பித்ததாகத் தெரிவித்துள்ள அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த அந்தந்த நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு நேற்று (24.01.2025) உத்தரவிட்டுள்ளது.

பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் நிதி உதவி அளித்து வருகிறது.

நிதியுதவி தடை

இதற்காக அந்த நாடு தனது வரவு செலவிலிருந்து குறிப்பிட்ட அளவு நிதியை ஒதுக்கி வருகிறது.

ஸ்தம்பிதம் அடையப்போகும் உலக நாடுகள்: ட்ரம்ப் பிறப்பித்த அதிரடி உத்தரவு | Us Issues Pause On Foreign Aid

கடந்த 2023-ல் சுமார் 60 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (துள்ளியமாக 5.17 இலட்சம் கோடி ரூபாய்) அல்லது அந்நாட்டின் பட்ஜெட்டில் சுமார் 1% ஒதுக்கப்பட்டது. 

இந்நிலையில் ட்ரம்பின் இந்த உத்தரவினால் 
சுகாதாரம், கல்வி, மேம்பாடு, வேலைவாய்ப்பு பயிற்சி, ஊழல் எதிர்ப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களுக்காக வழங்கப்பட்ட நிதியுதவி தடைசெய்யப்பட்டுள்ளது.

குடியரசுக் கட்சி

இதேவேளை, இஸ்ரேல் (Israel), எகிப்து (Egypt) மற்றும் சூடான் (Sudan) உள்ளிட்ட நாடுகளுக்கு உணவு வழங்குவதற்கான திட்டத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்தம்பிதம் அடையப்போகும் உலக நாடுகள்: ட்ரம்ப் பிறப்பித்த அதிரடி உத்தரவு | Us Issues Pause On Foreign Aid

மேலும் உலகளவில் பாராட்டப்பட்ட எச்ஐவி எதிர்ப்புத் திட்டமான, PEPFARக்கு வழங்கப்பட்டு வரும் நிதி உதவியும் நிறுத்தப்படவுள்ளது.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ. புஷ் இத்திட்டத்தை தொடங்கினார். அதிலிருந்து, இத்திட்டத்தின் மூலம் 55 இலட்சம் குழந்தைகளின் உயிர்கள் உட்பட 2.5 கோடி உயிர்கள் காப்பாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்