முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐரோப்பிய நாடுகளிலுள்ள தூதரகங்கள் : மூடுவதற்கு அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை

மேற்கு ஐரோப்பாவில் உள்ள பல தூதரகங்களை மூட அமெரிக்க வெளிவிவகாரத்துறை தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்தோடு, வாஷிங்டனில் (Washington) உள்ள அதன் தலைமையகத்தில் உள்ள பல நிபுணர் பணியகங்களை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் வெளிவிவகாரத்துறை ஆராய்ந்து வருகின்றது.

அதில், மனித உரிமைகள், அகதிகள், உலகளாவிய குற்றவியல் நீதி, பெண்கள் பிரச்சினைகள் மற்றும் மனித கடத்தலை எதிர்ப்பதற்கான முயற்சிகள் போன்ற பணியிடங்கள் இதில் அடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மஉள்ளூர் ஊழியர்

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மற்றும் அவரது கோடீஸ்வர உதவியாளர் எலோன் மஸ்க் ஆகியோர் இணைந்து செலவுக் குறைப்பு முயற்சியை முன்னெடுப்பதால், உலகெங்கிலும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் அமெரிக்க மற்றும் உள்ளூர் ஊழியர்களை குறைந்தது 10% என குறைப்பது குறித்து ஆராயுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளிலுள்ள தூதரகங்கள் : மூடுவதற்கு அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை | Us Plans To Close Embassies In European Countries

இதுமட்டுமன்றி, அவர் விசுவாசமற்றவர் என்று கருதுகின்ற அனைவரும் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றே தேர்தல் பரப்புரையின் போதும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

 நிபுணர்கள் தரப்பு

ஆனால், உலக அளவில் அமெரிக்கா முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை ட்ரம்ப் நிர்வாகம் கைவிடும் என்றால், அந்த வெற்றிடத்தை சீனாவும் ரஷ்யாவும் கைப்பற்றும் என்றே நிபுணர்கள் தரப்பு எச்சரித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளிலுள்ள தூதரகங்கள் : மூடுவதற்கு அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை | Us Plans To Close Embassies In European Countries

இருப்பினும், அமெரிக்க அரசாங்கம் மிகப் பெரியது என்றும் அமெரிக்க வரி செலுத்துவோர் அளிக்கும் உதவி வீணான மற்றும் மோசடியான முறையில் செலவிடப்பட்டுள்ளதாகவும் ட்ரம்பும் மற்றும் மஸ்க்கும் விமர்சிக்கின்றனர்.

இந்நிலையில், ஜேர்மனியில் Leipzig, Hamburg மற்றும் Dusseldorf ஆகிய நகரங்களும், பிரான்சில் Bordeaux மற்றும் Strasbourg ஆகிய நகரங்களிலும் இத்தாலியில் Florence பகுதியிலும் உள்ள தூதரகங்களை மூடவே அமெரிக்கா திட்டமிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.