உலகின் வல்லரசான அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் நாளை நவம்பர் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ளது.இவ்வாறு நடைபெறவுள்ள இந்த தேர்தலில் முன்கூட்டியே நடைபெற்ற வாக்குப் பதிவில், 6.80 கோடிக்கும் அதிகமான அமெரிக்கா்கள் வாக்களித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் வாக்குப் பதிவு நாளுக்கு முன்பாகவே வாக்குப் பதிவு மையங்களில் நேரடியாகவும், தபால் மூலமாகவும் வாக்களிக்கும் வசதி உள்ளது.
முன் கூட்டியே வாக்களிப்பிற்கு பல்வேறு காரணங்கள்
தோ்தல் நாளன்று மோசமான வானிலை, வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருத்தல், வாக்குப் பதிவு நாளன்று ஏற்படக்கூடிய எதிா்பாராத சிக்கல்கள் உள்ளிட்டவற்றை வாக்காளா்கள் எதிா்கொள்ளாமல் இருக்க இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், அந்நாட்டில் ஜனாதிபதி தோ்தலையொட்டி முன்கூட்டியே வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அமெரிக்கா முழுவதும் கோடிக்கணக்கான வாக்காளா்கள் ஆா்வத்துடன் வாக்களித்தனா். மொத்தம் 6.80 கோடிக்கும் அதிகமான அமெரிக்கா்கள் வாக்களித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடும் போட்டி
இந்தத் தோ்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய உப ஜனாதிபதி கமலா ஹாரிஸ்(kamala harris), குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (donald trump)ஆகியோா் போட்டியிடுகின்றனா்
இதேவேளை இந்த தேர்தலில் கமலா ஹாரிஸ் மற்றும் ட்ரம்ப் இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.