முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஈரானுடன் கைகோர்த்த சீனாவுக்கு ட்ரம்ப் விதித்த அதிரடி தடை

ஈரானுக்கு ஆயுதங்களை உற்பத்தி செய்ய உதவுகின்ற சீனா, துருக்கி உள்ளிட்ட பல நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொருளாதாரத் தடை விதித்துள்ளார். 

இஸ்ரேல் – ஈரானுக்கு இடையில் போர்பதற்றம் தொடங்கி இரண்டாவது வாரம் கடந்துள்ளது. 

இந்நிலையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படைக்கு (IRGC) இரட்டை பயன்பாட்டு தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதத் திட்டங்களுக்கான இயந்திரங்களை வழங்கியதற்காக சீனா, ஹொங்ஹொங், துருக்கி, சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு அமெரிக்கா புதிய தடைகளை அறிவித்துள்ளது.

ஈரானுக்கு ஆதரவு 

அமெரிக்க பொருளாதாரத் துறை (OFAC) வெளியிட்ட அறிக்கையின் படி, Rayan Roshd Afzar Company (RRA) மற்றும் Towse Sanaye Nim Resanaye Tarashe ஆகிய இரு நிறுவனங்களுக்காக கப்பல்களில் அனுப்பப்பட்ட உயர் நுட்ப உபகரணங்களை மறைக்க பல முன்னணி நிறுவனங்கள் தவறான கப்பல் ஆவணங்களைப் பயன்படுத்தியதாக கூறப்படுகின்றது.

ஈரானுடன் கைகோர்த்த சீனாவுக்கு ட்ரம்ப் விதித்த அதிரடி தடை | Us Sanctions China Iran Israel Conflict Trump

SHUN KAI XING என்ற பனாமா கொடி ஏந்திய bulk carrier கப்பலை, ஹொங்ஹொங் நாட்டைச் சேர்ந்த Unico Shipping Co Ltd இயக்கியது. இந்த கப்பல் சர்வதேச தடைகள் விதிக்கப்பட்டுள்ள இரான் நிறுவனங்களுக்கு அனுமதியின்றி தொழில்நுட்பப் பொருட்கள் கடத்த முயற்சித்ததாக கூறப்படுகிறது.

சிங்கப்பூரின் V-Shipping Pte Ltd மற்றும் சீனாவின் Shenzhen Xinxin Shipping Co Ltd ஆகியன இந்தச் சரக்குகளை ஒழுங்கமைத்ததுடன், இறுதி வாடிக்கையாளர்களை மறைக்கும் வகையில் ஆவணங்களைத் திருத்தியுள்ளன.

ட்ரம்ப்பின் உத்தரவு 

மேலும், துருக்கி நிறுவனமான Edisa Dis Ticaret Ltd கடைசி பெறுநரை மறைக்க முயற்சி செய்ததாகவும் சீன நாட்டு கப்பல் மேல் அதிகாரி Zhang Yanbang போலியான தகவல்களை சமர்ப்பித்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க நிதித் துறை துணைச் செயலாளர் Brian E. Nelson, “ஈரானின் ஆயுதத் திட்டங்களை ஆதரிக்கும் எந்த முயற்சியும் பொறுப்பேற்கச் செய்யப்படும்” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார். 

ஈரானுடன் கைகோர்த்த சீனாவுக்கு ட்ரம்ப் விதித்த அதிரடி தடை | Us Sanctions China Iran Israel Conflict Trump

ஈரானின் ஆயுத மேம்பாடு மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் செயல்பாடுகளை குறிவைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

புதிய தடைகளின் விளைவாக, அமெரிக்காவில் சம்பந்தப்பட்ட தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் வைத்திருக்கும் எந்தவொரு சொத்துக்களும் முடக்கப்படும்.

கூடுதலாக, அமெரிக்க குடிமக்கள் இனி தடைகளுக்கு உட்பட்டவர்களுடன் வணிகம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், குறித்த தடை விதிக்கப்பட்ட நாடுகளுடன் வணிகம் செய்யும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களும் தடை செய்யப்படலாம் என்று அமெரிக்க கருவூலத் துறை தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.