முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ட்ரம்பால் குறிவைக்கப்படும் வெனிசுலாவின் மூன்றாவது கப்பல்: அதிகரிக்கும் பதற்றம்

வெனிசுலாவின் மூன்றாவது கப்பலை அமெரிக்க கடலோர காவல்படை பின்தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை பதவியில் இருந்து வெளியேற்றும்
முயற்சியாக அவரது நாட்டிற்குச் சொந்தமான இரண்டு எண்ணெய் கப்பல்களை அமெரிக்க
இராணுவம் இந்த மாதம் கைப்பற்றியது.

கைப்பற்றப்பட்ட இந்த எண்ணெயை அமெரிக்காவின் யுத்த கால இருப்பு தேவைக்கு பயன்படுத்தவோ அல்லது விற்பனை செய்யவோ போவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

வெனிசுலா அரசு

அத்தோடு, வெனிசுலா அரசு எண்ணெய் வருவாயைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட
குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக ட்ரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டியிருந்தது.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள வெனிசுலா அரசு, அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை
கடற்கொள்ளை என்று வர்ணித்திருந்தது.

இந்தநிலையில், அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்பு குறித்து விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு
பேரவையின் அவசரக் கூட்டத்திற்கும் வெனிசுலா அழைப்பு விடுத்துள்ளது.

கடல் வழி மட்டுமல்லாது தரை வழியாகவும் இதே போன்ற கடுமையான நடவடிக்கைகளைத்
தொடங்குவோம் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ட்ரம்பால் குறிவைக்கப்படும் வெனிசுலாவின் மூன்றாவது கப்பல்: அதிகரிக்கும் பதற்றம் | Us Seizes Venezuelan Oil Ships Amid Tensions

தரை வழியாக வர நினைப்பவர்கள் சிதறடிக்கப்படுவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தன்னைப் பிடிக்க தகவல் தருபவர்களுக்கு வழங்கப்படும் வெகுமதித் தொகையை ட்ரம்ப்
இரட்டிப்பாக்கியுள்ள நிலையில், ட்ரம்ப் தனது சொந்த நாட்டின் பொருளாதார
மற்றும் சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதே உலகிற்கு நல்லது என மதுரோ பதிலடி கொடுத்துள்ளார்.

வெனிசுலாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் எண்ணெய் ஏற்றுமதியை
அமெரிக்கா முடக்கியுள்ளதால் தென் அமெரிக்க பிராந்தியத்தில் பதற்றம்
அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.