முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தடம் மாறும் இஸ்ரேல் – ஈரான் போர்.. ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா!

இஸ்ரேல்-ஈரான் நாடுகளுக்கிடையிலான நீண்ட கால நிழல் யுத்தம் தீவிரமடைந்து நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது, சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு இஸ்ரேல் மீது குற்றம்சாட்டி உள்ள ஈரான், இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை நடத்தியது.

இந்த எதிர்பாராத தாக்குதலினை இஸ்ரேல் அமெரிக்காவின் உதவியுடன் முறியடித்தது, இத்தாக்குதல் காரணமாக இரு நாடுகளிடையே போர் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்போவதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேலின் பதிலடி தாக்குதல் மோசமாக இருக்கும் பட்சத்தில் அது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக, மத்திய கிழக்கில் பெரிய அளவிலான போருக்கு வழிவகுக்கும் என்ற கவலை அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் : உச்சத்தை தொட்ட எரிபொருள் மற்றும் தங்கத்தின் விலைகள்

மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் : உச்சத்தை தொட்ட எரிபொருள் மற்றும் தங்கத்தின் விலைகள்

அமெரிக்கா தடை

இந்நிலையில், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரான் மீது அமெரிக்காவும், இங்கிலாந்தும் புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

ஈரான் தனது தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதற்காகவும், மீண்டும் அத்தகைய நடவடிக்கைகள் நடக்காமல் தடுக்கவும் இந்த பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தடம் மாறும் இஸ்ரேல் - ஈரான் போர்.. ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா! | Us Uk Issue New Sanctions On Iran Attack Israel

ஆனால், ஏற்கனவே ஈரானின் பல நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்திருப்பதால், புதிய பொருளாதாரத் தடை பெற்ற தனிநபர்கள் அமெரிக்க அதிகார வரம்புகளில் பெரிய அளவில் சொத்துக்களை கொண்டிருக்க வாய்ப்பில்லை. எனவே, பொருளாதார தடையின் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஈரானைச் சேர்ந்த 16 தனிநபர்கள் மற்றும் ஈரானிலுள்ள 2 நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நிறுவனங்கள், ஏப்ரல் 13ஆம் திகதி இஸ்ரேல் மீதான தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன்களை இயக்கும் இயந்திரங்களைத் தயாரிக்கின்றன.

பதிலடி கொடுக்கும் திட்டம் இல்லை: பதுங்கித் தாக்கும் உத்தியைக் கையாள்கிறதா ஈரான்!

பதிலடி கொடுக்கும் திட்டம் இல்லை: பதுங்கித் தாக்கும் உத்தியைக் கையாள்கிறதா ஈரான்!

குற்றம் சாட்டப்பட்டுள்ளது

உருக்கு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 5 நிறுவனங்கள், ஈரானிய வாகன தயாரிப்பு நிறுவனமான பஹ்மான் குழுமத்தின் மூன்று துணை நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடம் மாறும் இஸ்ரேல் - ஈரான் போர்.. ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா! | Us Uk Issue New Sanctions On Iran Attack Israel

இது ஈரானின் இராணுவம் மற்றும் பிற ஆதரவு குழுக்களுக்கு பொருட்களை வழங்கி ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இங்கிலாந்து அரசு, பல ஈரான் இராணுவ கிளைகள் மற்றும் ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தொழில்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
  
சத்தமின்றி பதில் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்...அதிகரிக்கும் போர்ப்பதற்றம்!

சத்தமின்றி பதில் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்…அதிகரிக்கும் போர்ப்பதற்றம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.