இயக்குனர் சுந்தர்.சி படங்களுக்கு என்று ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. அதற்கு காரணம் அவர் காமெடி, ஹாரர் என இரண்டும் கலந்து எடுக்கும் விதம் தான்.
தற்போது வடிவேலு உடன் கேங்கர்ஸ் என்ற படத்தை அவர் இயக்கி இருக்கிறார். அது பற்றி தற்போது வடிவேலு மற்றும் சுந்தர்.சி என இருவரும் சேர்ந்து பேட்டி கொடுத்து வருகின்றனர்.

அரண்மனை 10 வரை இருக்கு..
சுந்தர்.சி தன்னிடம் அரண்மனை படங்கள் பற்றி சொன்ன ஒரு விஷயத்தை வடிவேலு பேட்டியில் கூறி இருக்கிறார்.
“அடுத்து எந்த படமும் கிடைக்கவில்லை என்றால் அரண்மனை 5 எடுப்பேன், அதற்கு அடுத்தும் எதுவும் கிடைக்கவில்லை என்றல் அரண்மனை 6 எடுப்பேன்.”
“இப்படி 10 வெச்சிருக்கேன் அண்ணே, அதை வெச்சி ஓட்டிருவேன் என சொல்கிறார்” என வடிவேலு கூறி இருக்கிறார்.


